காதல் வலை வீசி பணம் பறித்த கும்பலின் மிரட்டலால் கல்லூரி மாணவி தற்கொலை

by Lifestyle Editor
0 comment

கோவை சிங்காநல்லூரில் காதல் வலை வீசி பணம் பறித்த கும்பலின் மிரட்டலால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

என்ஜிபி கல்லூரியில் படித்துவந்த 19வயது மாணவிக்கும் , ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர் கேசவ குமாருக்கும் பேருந்தில் சென்றுவரும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. கேசவகுமார் பணம் கேட்டதால், தனது வீட்டிலிருந்து 35 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 2 சவரன் நகையை அம்மாணவி கொடுத்துள்ளார்.

மீண்டும் பணம் கேட்டதால் பேசுவதை தவிர்த்துவந்த மாணவியிடம், இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஆபாசமாக மாற்றி சமூக வலைதளங்களில் பதிவேற்றிவிடுவேன் என கேசவ குமார் மிரட்டியுள்ளாரன். இதில் மனமுடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். போலீசார் விசாரணையில், கேசவ் குமார் மாணவிகளை காதல்வலை வீசி பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்தவன் என்பது தெரியவந்ததையடுத்து அவரனை போலீசார் தேடிவருகின்றனர்.

Related Posts

Leave a Comment