நாளை மறுநாள் முதல் அருங்காட்சியகங்கள் திறக்கப்படும்

by Lifestyle Editor
0 comment

கொரோனா காரணமாக இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்கள் வரும் 16ஆம் தேதி முதல் திறக்கப்படும் என மத்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமடைந்தது. இதையடுத்து பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான், சட்டீஸ்கர் போன்ற பல்வேறு மாநிலங்களிலும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

தொடர்ந்து ஏப்ரல் 15ஆம் தேதி இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் (ASI) கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் புராதான சின்னங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்களை மூட மத்திய தொல்லியல் துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதனையடுத்து தாஜ்மகால், செங்கோட்டை போன்ற முக்கிய சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. இது சுற்றுலா பயனிகளிடையே பெரும் ஏமாற்றத்தை தந்தது.

இந்நிலையில் வரும் 16ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்து புராதான சின்னங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் திறக்கப்படும் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. நாளை மறுநாள் முதல் திறக்கப்படும் அருங்காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்கள் நுழைவுச் சீட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யதுக்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றியே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment