கூடுதல் தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு!

by Lifestyle Editor
0 comment

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூன் 21ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவிப்பை வெளியிட்டது. டாஸ்மாக் கடைகள் திறப்பு, காப்பீட்டு நிறுவனங்கள் செயல்பட அனுமதி உள்ளிட்ட பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அவை நாளை முதல் அமலுக்கு வர உள்ள நிலையில் தற்போது கூடுதல் தளர்வுகளை அளித்து தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், அரசு அலுவலகங்களில் இருந்து சான்றிதழ் சேவைகளை பெற இ-சேவை மையங்கள் இயங்க அனுமதி அளிப்பதாகவும் கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் 50 சதவீதம் பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாகவும் இனிப்பு, கார வகைகள் விற்கும் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்க அரசு அனுமதி அளிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல, 27 மாவட்டங்களில் நாளை முதல் தேநீர் கடைகளை திறக்க அரசு அனுமதி அளிக்கப்படுவதாகவும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை தேநீர் கடைகளை திறந்து பார்சல் முறையில் விற்பனை செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.

பார்சல் முறையில் தேநீர் பெற மக்கள் பாத்திரங்களைக் கொண்டு வந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் நெகிழிப் பைகளில் தேநீர் வழங்குவதை தவிர்க்குமாறும் அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், தேநீர் கடைகளின் அருகே நின்று தேநீர் அருந்த அனுமதி இல்லை என்றும் அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

Related Posts

Leave a Comment