இங்கிலாந்தில் 25 முதல் 29 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி!

by News Editor
0 comment

இங்கிலாந்தில் 25 முதல் 29 வயதுடையவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் தங்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி பதிவு செய்ய முடியும் என சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ஜூன் 21ஆம் திகதி இங்கிலாந்தின் வரைபடத்தின் முடக்கநிலையில் இருந்து நான்காவது படி முன்னேறுமா என்பது மிக விரைவில் அறிவிக்கப்படும்.

இந்த வாரத்தில் இருந்து 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்கத் தொடங்குவோம்.

அடுத்த மாத இறுதிக்குள் இங்கிலாந்தில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் ஒரு தடுப்பூசி வழங்குவதற்கான இலக்கை நாங்கள் நெருங்கி வருகிறோம்’ என கூறினார்.

Related Posts

Leave a Comment