சிலவர் சிட்டி என அழைக்கப்படும் கைவினை கலைகள் நிறைந்த இடம் எது தெரியுமா ?

by Lifestyle Editor
0 comment

கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறிகளைப் பொறுத்தவரை, இந்தியா மிகவும் பெருமைக்குரிய நாடாகவே உள்ளது. அதாவது கல் சிற்பங்கள் மற்றும் நகைகள் பொறிக்கப்பட்ட துணிகள், கண்ணை கவரும் வகையில் தைக்கப்பட்ட எம்பிராய்டரி வேலைப்பாடுகள் மற்றும் திறமையாக வடிவமைக்கப்பட்ட உலோக கண்ணாடிகள், போன்றவை இந்திய கலாச்சாரத்தை எடுத்துக்காட்டுகின்றன.

இந்தியாவைப் போலவே மற்ற நாடுகளிலும் தலைதலை முறையாக கைவினைப் பொருள்கள் தயாரிக்கப்பட்டிருந்தாலும் இங்குள்ள குக்கிராம மக்கள் செய்யும் ஒவ்வொரு பொருள்களும் உலகெங்கிலும் உள்ள மக்களை கவர்ந்திழுகின்றனர். அதாவது ஆக்ராவில் பளிங்கு செதுக்குபவர்கள், பூஜின் ஜவுளி கைவினைப்பொருட்கள், காஞ்சிபுரம் மற்றும் வாரணாசியில் தயாரிக்கப்படும் பட்டுப் புடவைகள் போன்றவை இந்தியாவிற்கு பெருமையை சேர்கின்றன.

இந்தியாவில் ஏராளமான சிறிய கிராமங்களில் வசிக்கும் பல தலைசிறந்த கைவினைஞர்கள் உள்ளனர். ஆனால் அவர்களிடம் சரியான வருமானங்கள் இல்லாததால், அவர்களின் மூதாதையர் மரபுகளை விட்டுவிட்டு சிறந்த வேலை வாய்ப்புகளுக்காக மற்ற நநகரங்களுக்குச் செல்கின்றனர். ஆனால் சிலர் இன்னும் தங்கள் திறமையைப் வெளிப்படுத்துகின்றனர். அவற்றில் சில கைவினை பொருள்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

1. கிளே பாட்டர்ஸ் ஆப் திருச்சிகடி (Clay potters of Thiruchigadi)

தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தின் மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள திருச்சிகடி ஒரு பழங்குடி குக்கிராமமாகும். இது கோட்டா பழங்குடியினரின் தாயகமாகும். இங்கு நீண்ட காலமாக பாரம்பரிய களிமண் மட்பாண்டங்களின் கைவினை பொருள்கள் தயாரிக்கப்படுகிறது. மட்பாண்ட கிராமங்கள் நாடு முழுவதும் பரவலாக இருந்தாலும், இந்த மட்பாண்டங்களின் தனித்துவமான தன்மை என்னவென்றால் பழங்குடியின பெண்கள் மட்டுமே இங்கு கைவினைப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தங்கள் தாய்மார்கள் மற்றும் பாட்டிகளிடமிருந்து இந்த தொழிலை கற்றுக்கொண்டுள்ளனர்.

2. சில்வர் ஃபிலிகிரி ஆர்ட்டிசின் ஆப் கட்டாக் (Silver filigree artisans of Cuttack)

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே தரகாசியின் வெள்ளி ஃபிலிகிரீ வேலை ஒடிசாவின் கட்டாக்கில் அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்தோனேசியாவுக்குத் திரும்பும் வழியிலேயே வரலாற்றாசிரியர்கள் இந்த கைவினைக்கான குறித்த ஒரு அரிய இணைப்பைக் கண்டறிந்துள்ளனர். ஒடிசாவிற்கும் தென்கிழக்கு ஆசியாவிற்கும் இடையிலான விரிவான கடல்சார் நடவடிக்கைகளின் போது பண்டைய காலங்களில் நிகழ்ந்த கருத்துக்கள் மற்றும் கலாச்சாரங்களின் பரிமாற்றம் இந்த ஒற்றுமைக்கு காரணமாக இருந்திருக்கலாம். இன்று தரகாசி சிறிய நகரமாக இருந்தாலும் ஒரு அடையாளத்துடன் காணப்படுகிறது. அதாவது கட்டாக்கை ‘சில்வர் சிட்டி’ என்றும் அழைகின்றனர் .

மிக சிறந்த திறமை வாய்த்த கைவினை கலைஜர்கள் தேவைப்படும் ஃபிலிகிரீ என்பது ஒரு மென்மையான வகையான உலோக வேலை. பொதுவாக சிறிய மணிகள் அல்லது ரத்தினக் கற்கள் மற்றும் முறுக்கப்பட்ட நூல்கள் போன்ற இரண்டையும் சேர்த்து செய்யப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை ஒரு பொருளின் மீது ஒன்றாக இணைக்கப்படுகின்றன. இந்த உலோகம் கலை ரீதியாக இன்னும் பல அழகிய ஆடம்பரமான வடிவங்களில் வடிவமைக்கப்படுகிறது. தற்போது இந்த சிறந்த தரகாசி கைவினை பொருட்களை துர்கா பந்தல்களில் ஒடிஸி நடனக் கலைஞர்களிடத்தில் காணலாம்.

3. டெர்ரகோட்டா ஆர்ட்டிசின் ஆப் ஆஷாரிகண்டி (Terracotta artisans of Asharikandi)

பண்டைய ஹரப்பா நாகரிகத்தை அசாமின் துப்ரி மாவட்டத்தில் கிட்டத்தட்ட 2,500 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு அழகிய சிறிய கிராமத்துடன் இணைப்பது
டெரகோட்டாவின் மரபு. அசாமில் உள்ள ஒரு சிறிய கிராமமான ஆஷாரிகண்டியில் 300 க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் டெரகோட்டா மட்பாண்டங்கள் மற்றும் பொம்மை தயாரிப்பின் பழங்கால கைவினை பொருள்களை வைத்திருக்கின்றனர்.

இந்த கிராமத்திலிருந்து வரும் ஹதிமா புத்துல் கைவினை பொருள்கள் வாங்கு பவர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது. அதாவது யானை போன்ற காதுகளைக் கொண்ட ஒரு தாயின் மடியில் ஒரு குழந்தையுடன் இருக்கும் ஒரு பொம்மை இந்த கிராமத்தின் தனித்துவமான படைப்பாற்றலுக்கு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த எடுத்துக்காட்டுகள் காலப்போக்கில் அவர்களின் திறமையை இந்தியா முழுவதும் எடுத்துக்காட்டியது.

4. மெட்டல் மிரர் மெக்கேர்ஸ் ஆப் (Metal mirror makers of Aranmula)

பல நூற்றாண்டுகள் பழமையான ஸ்ரீ கிருஷ்ணா கோயில், வல்லசத்யாவின் தனித்துவமான சடங்கு விருந்து மற்றும் வருடாந்திர ஸ்னேக் போட் ரேஸ் ஆகியவற்றால் புகழ்பெற்றது. இதுதவிர கேரளத்தின் பதனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த அரண்முலா என்ற கவர்ச்சியான கிராமம் உலோக அலாய் கண்ணாடியின் மர்மமான கைவினைக்கு தாயம். இது அரண்முலா கண்ணாடி என்றும் அழைக்கப்படுகிறது.

இந்திய வரலாற்றின் வேத காலத்தில்கூட இது இருந்ததாக நம்பப்படுகிறது. வெள்ளி, வெண்கலம், தாமிரம் மற்றும் தகரம் ஆகியவற்றுடன் கலந்த உலோகங்களின் கலவை தொடர்ந்து ஒரு ரகசியமாகவே உள்ளது. இது கண்ணாடி தயாரிப்பாளர்களின் தலைமுறையினரால் கடுமையாக பாதுகாக்கப்படுகிறது. இதன் மேற்பரப்பு பகுதிகள் மெருகூட்டப்பட்டு முழுமையாக்கப்படுவதற்கு முன்பு, கைவினைஞர்களால் அழகான செதுக்கல்களால் அலங்கரிக்கப்படுகிறது.

5. பிளாக் பிரின்டர்ஸ் ஆப் அஜ்ரக்பூர் (Block printers of Ajrakhpur)

குஜராத்தில் கச்சிற்கு அருகிலுள்ள சிறிய கிராமம் அஜ்ராக் தொகுதி அச்சிடும் கலைக்கு சொந்தமானது. இது உலகம் முழுவதும் இருந்து வரும் துணி பிரியர்களை கவர்ந்திழுகிறது. இண்டிகோ, மருதாணி, மஞ்சள், மாதுளை, இரும்பு மற்றும் சேற்றில் இருந்து பெறப்பட்ட இயற்கை வண்ணங்களால் சாயம் பூசப்பட்ட பிறகு, ஒவ்வொரு துணியும் 20 தடவைகளுக்கு மேல் கழுவப்பட்டு அதன் பின் கையால் செதுக்கப்பட்ட மரத் தொகுதிகளைப் பயன்படுத்தி அழகிய வடிவங்களும் உருவங்களும் அச்சிடப்படுகின்றன.

இந்த அச்சிடுதல் சுமார் 3,000 ஆண்டுகள் பழமையானது. மேலும் இந்த கலை தலைமுறையாக பின்பற்றப்பட்டு வருகிறது. துரதிர்ஷ்டவசமாக, 2001 ஆம் ஆண்டின் பேரழிவு பூகம்பத்தால் பல கைவினைஞர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் அவர்களின் பட்டறைகள் அழிக்கப்பட்டன. இந்த சம்பவம் கட்ச் முழுவதும் பரவியிருக்கும் அனைத்து காத்ரி கைவினைஞர்களையும் ஒன்றிணைத்து தங்கள் பாரம்பரியத்தை கட்டியெழுப்ப தூண்டியது. இப்படி உருவானது தான் அஜ்ரக்பூர் .

Related Posts

Leave a Comment