இந்தியாவில் பேஸ்புக், ட்விட்டர் 2 நாட்களில் தடை?? என்ன காரணம் தெரியுமா?? முழு தகவல் இதோ!!

by News Editor
0 comment

இந்திய அரசின் புதிய சமூகவலைத்தள கொள்கைகளுக்கு கட்டுப்படாத பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களுக்கு நாளை முதல் தடை விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான சமூக வலைத்தளங்களில் ஒன்று பேஸ்புக், ட்விட்டர். உலகம் முழுவதும் பல கோடி பேர் இந்த இரண்டு சமூக வலைத்தளங்களிலும் உள்ளனர். இந்தியாவிலும் இந்த சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் பெரியளவில் உள்ளது. இந்நிலையில் குறிப்பிட்ட இந்த சமூக வலைத்தளங்கள் நாளை முதல் இந்தியாவில் இயங்குமா? விரைவில் தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

அதற்கு காரணம், இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY) சமீபத்தில் அனைத்து சமூக நிறுவனங்களுக்கும் புதிய விதிகளை பிறப்பித்து அவற்றை பின்பற்ற மூன்று மாத கால அவகாசம் அளித்தது. மேலும் அதுகுறித்து குறிப்பிட்ட நிறுவனங்கள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் இதுகுறித்து இன்றுவரை பதிலளிக்கவில்லை. இதனால் அடுத்த 2 நாட்களில் குறிப்பிட்ட சமூக வலைத்தளங்கள் இந்தியாவில் தடை செய்யக்கூட வாய்ப்பிருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment