மக்களே!! நாளை முதல் இ-பாஸ் தேவையில்லை!! இதை மட்டும் செய்தாலே போதும்.. தமிழக அரசு அறிவிப்பு!! முழு தகவல் இதோ!!

by News Editor
0 comment

நாளை முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு வெளியேயும் பயணம் செய்ய இ-பாஸ் அவசியம் என கூறப்பட்டநிலையில், தற்போது அதுகுறித்து விளக்கமளித்துள்ளது தமிழக அரசு.

தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பினால் வரும் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக வரும் மே 17 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு வெளியேயும் பயணம் செய்ய இ-பாஸ் அவசியம் என கூறப்பட்டது.

ஆனால், தமிழக அரசு இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ளது. அத்தியாவசிய பணிகளுக்காக மாவட்டங்களுக்கு உள்ளையேயும், மாவட்டங்களுக்கு வெளியேயும் செல்ல இ-பாஸ் தேவை இல்லை எனவும், https://eregister.tnega.org என்ற தளத்தில் பதிவு செய்தால் மட்டும் போதுமானது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாவட்டங்களுக்கு இடையிலுமான போக்குவரத்துக்கு இ பாஸ் தேவையில்லை என்றும், இ ரிஜிஸ்டர் வேறு, இ பாஸ் வேறு என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Related Posts

Leave a Comment