இறந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் : மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை : முதல்வர் ஸ்டாலின் அதிரடி!

by News Editor
0 comment

கொரோனா சிகிச்சை பணியின்போது உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொரனோ இரண்டாவது அலை காலத்தில் பணியாற்றி வரும் மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏப்ரல், மே, ஜூன் மாத காலத்திற்கு மருத்துவர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூபாய் 30,000 அளிக்கப்படும் என்றும் செவிலியர்களுக்கு ரூபாய் 20,000 இதர பணியாளர்களுக்கு 15,000 தரப்படும் என்றும் கூறியுள்ளார்.பட்டமேற்படிப்பு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்களுக்கு ரூபாய் 20, 000 தரப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment