காட்டு விலங்குகள் உங்களை துரத்துவது போல கனவு கண்டால் அர்த்தம் என்ன

by Lifestyle Editor
0 comment

கனவுகளும் அதன் அர்த்தங்களும் பொதிந்து கிடக்கும் ஒரு மாயாஜாலம் என்றே சொல்லலாம். நாம் சில நேரங்களில் நாம் பார்க்கும் கனவுகளை போல திரைப்படங்களில் கூட இப்படி மாயாஜாலங்களை பார்த்திருக்க மாட்டோம். அப்படி கிராபிக்ஸ் காட்சிகளை அள்ளித்தெளித்து கொண்டு வரும் கனவுகள். ஹாலிவுட் படங்களில் வரும் மயிர்கூச்செரியும் காட்சிகளை விட நாம் காணும் சில கனவுகள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும்.

நாம் பார்த்திராத இடங்கள், பார்த்திராத நபர்கள் இப்படி நாம் அறிந்திராத பல விஷயங்களை ஒன்றாக சேர்த்து ஒரு திரைப்படம் போல கனவுகள் வந்து நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்தும். சில கனவுகள் பலநாள்கள் நம்முடைய மனதை விட்டு அகலாது. இதில் சிலருக்கு திகில் திரைப்படங்களை போல ஏதாவது துரத்தும் கனவுகள் அடிக்கடி வரும். இப்படி கனவு கண்டு நடு நிசியில் தூக்கத்தை கெடுத்தவர்கள் பலருண்டு.

அதன் அர்த்தமும் தெரியாமல் அதையே யோசித்து ஒரு வழியாகி விடுவார்கள். அதிலும் பலருக்கு விலங்குகள் துரத்துவது போல கனவு வரும். பொதுவாக காட்டு விலங்குகளை நீங்கள் உங்கள் கனவுகளில் காண்பது வரப்போகும் கடினமான காலங்களை குறிக்கிறது.

ஏதோ ஒரு விலங்கு உங்களை தாக்குவது போலவோ துரத்துவது போலவோ நீங்கள் கனவு கண்டால் உங்களை சுற்றியுள்ள ஒருவர் உங்களை பிரச்சனையில் தள்ள நேரம் பார்த்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் உங்கள் சுற்றிலும் எதிர்மறை ஆற்றல் அதிகரித்து வருகிறது என்பதையும் இது குறிக்கிறது. உங்களை தாக்க வரும் விலங்கு உங்களை தாக்கி விட்டு ஓடிவிட்டால் நீங்கள் பிரச்சனைகளிலிருந்து விரைவில் வெளியே வருவீர்கள் என அர்த்தம்.

குதிரை உங்களை விரட்டுவது போல நீங்கள் கனவு கண்டால் உங்களுக்கு புதியதாக பிரச்சனைகள் ஆரம்பிக்க போகிறது என அர்த்தம். புதிய விஷயங்கள் நீங்கள் ஆரம்பிக்க நினைத்தால் கொஞ்சம் தள்ளி போடுவது நல்லது. அதையும் தாண்டி நீங்கள் ஆரம்பித்த ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் மிகவும் கவனமாக செயல்படுதல் நல்லது.

யானை உங்களை துரத்துவது போல நீங்கள் கனவு கண்டால் உங்களுக்கு தெய்வ குற்றம் ஏற்பட்டுள்ளது என அர்த்தம். உடனடியாக அதற்கு பிராயசித்தம் மேற்கொள்வது நல்லது. ஏதாவது வேண்டுதல்கள் நீங்கள் செய்ய நினைத்து அதை செய்யாமல் விட்டிருந்தால் உடனடியாக அதை நிறைவேற்றி விடுங்கள்.

யானை உங்களை தொடர்ந்து துரத்தி வருவது போல நீங்கள் கனவு கண்டால் உங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்திய பழைய விஷயங்களால் மீண்டும் மனசங்கடங்கள் ஏற்படும். கூடவே புதிதாக ஒரு சில பிரச்சனைகளும் ஏற்படும். கவனமாக இருத்தல் நலம்.

புலி உங்களை துரத்தி வருவது போல நீங்கள் கனவு கண்டால் உங்கள் உறவினர்கள் மூலமாக உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உறவினர்களிடம் வாக்கு கொடுக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத வாய் வார்த்தைகளை தவிர்ப்பது நலம்.

சிங்கம் உங்களை துரத்தி உங்கள் மேல் பாய்ந்து கடிப்பது போல நீங்கள் கனவு கண்டால் உங்கள் எதிரிகளால் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும்.

சிங்கம் உங்களை துரத்தி வருவது போல நீங்கள் கனவு கண்டால் அரசாங்கம் அதிகாரிகளால் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும். செய்யும் விஷயங்களை நேர்மையாக கவனமாக செய்தால் பிரச்சனைகளில் இருந்து நீங்கள் தப்பிக்கலாம்.

கரடி உங்களை துரத்துவது போல நீங்கள் கனவு கண்டால் ஒரு சில பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்படும்.

ஓநாய் உங்களை விரட்டுவது போல நீங்கள் கனவு கண்டால் உங்கள் உறவினர்களிடம் பகை ஏற்பட போகிறது என அர்த்தம். கொஞ்சம் அனுசரித்து விட்டுக்கொடுத்து சென்றால் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

காளை மாடு உங்களை துரத்துவது போல நீங்கள் கனவு கண்டால் தேவையில்லாத வீண் பிரச்சனைகள் ஏற்படும்.

Related Posts

Leave a Comment