ஓபிஎஸ்-ஐ சமாதானம் செய்ய அவரது வீட்டுக்கு சென்றார் ஈபிஎஸ்

by Lifestyle Editor
0 comment

தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான கடிதத்தை சட்டப்பேரவை செயலரிடம் அதிமுக நிர்வாகிகள் அளித்தனர். இதன் மூலம் கடந்த 4 நாட்களாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் இடையே நடந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் அதிமுக எதிர்கட்சி தலைவராக தேர்வான எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு சென்றார். காலை நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்திலிருந்து ஓ பன்னீர்செல்வம் அதிருப்தியில் வெளியேறிய நிலையில் அவரை சமாதானப்படுத்த எடப்பாடி செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் உடன் சென்றனர்.

Related Posts

Leave a Comment