அண்ணா பல்கலை. இன்ஜினியரிங் மாணவர்களுக்கு மறு தேர்வு

by Lifestyle Editor
0 comment

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள தனது இல்லத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா, பாரதிதாசன், பாரதியார், சென்னை, அன்னை தெரசா, திருவள்ளுவர் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்களும் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பின் அண்ணா பல்கலைக்கழக இன்ஜினியரிங் மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்துவது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதன் எதிரொலியாக மறு தேர்வு நடத்தப்படவுள்ளது. மறு தேர்வை தோல்வி அடைந்தவர்களுடன், வெற்றி பெற்றவர்களும் எழுதலாம் எனவும், பிற மாணவர்களுக்கு வரும் 25-ம் தேதி முதல் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடைபெறும் எனவும் உயர்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment