வயிறு பிரச்சினையா?

by Lifestyle Editor
0 comment

வயிற்று பொருமல் மற்றும் ஃபுட் பாய்சனிற்குத் தீர்வுகள்

பூண்டு

இது ஆன்டிவைரஸ், ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஃபங்கல் குணங்களைக் கொண்டது. வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற அறிகுறிகளுக்கு நிவாரணம் அளிக்கும். மாற்றாக, ஒரு சில பூண்டு பற்களை தண்ணீரில் சேர்த்து தண்ணீரை கொதிக்கவத்து பருகினால் வயிற்றுப் பிரெச்சனைகளைத் தீர்த்து விடும்.

எலுமிச்சைச் சாறு

பாக்டீரியாவை உங்கள் வயிற்றிலிருந்து வெளியேற்ற ஒரு சிறந்த மருந்தாக இதைக் கருதலாம். ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில் சிறிதளவு சர்க்கரையை கலந்து மூன்று வேளை பருக வேண்டும். இது கடினமாக இருந்தால் எலுமிச்சை சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து, நாள் முழுவதும் குடிக்கலாம்.

தேன்

தேன், அஜீரணம் மற்றும் வையிற்றுப் பிரச்சனைகளைத் தீர்க்க உகந்தது. மூன்று வேளையும் உணவு உட்கொண்ட பிறகு, ஒரு தேக்கரண்டித் தேனை சாப்பிட்டு வர, வயிற்றின் அமிலம் குறைந்து வயிற்றுப் பொறுமல் குணமாகும்.

வழைப்பழம்

உணவு விஷத்தின் தாக்கத்தால் வாந்தி மற்றும் வயிற்றுப் போக்குக் காரணமாக உடல் சோர்வாகவும் வலுவின்றி இருக்க நேரிடும். வழைப்பழம் அதைத் தடுத்து, உடம்பில் சக்தியை மீண்டும் கொண்டுவர உதவும். பால் மற்றும் வழைப்பழத்தை அடித்து அதில் ஒரு சிட்டிகை பட்டைப் பொடியைக் கலந்து பருகலாம்.

Related Posts

Leave a Comment