9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்… தமிழக அரசு அதிரடி!

by Lifestyle Editor
0 comment

தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்து அரசு அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். தலைமை செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் செய்தித்தாள் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு, புதிய தலைமை செயலாளராக இறையன்பு நியமனம் செய்யப்பட்டார்.

அதே போல ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். உளவுத்துறைக்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமனம் செய்யப்பட்டார். தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டார். இவ்வாறு அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், 9 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐபிஎஸ் அதிகாரிகள் ஷகில் அக்தர், கந்தசாமி, ரவி, ஈஸ்வரமூர்த்தி, ஆசியம்மாள், அரவிந்தன், சரவணன், திருநாவுக்கரசு மற்றும் சாமிநாதன் ஆகியோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஐபிஎஸ் அதிகாரி ஷகில் அக்தர் சிபிசிஐடி டிஜிபியாகவும், ஈஸ்வரமூர்த்தி உளவுத்துறை ஐஜியாகவும், கந்தசாமி லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment