பைக்கில் சென்றால் கடும் நடவடிக்கை … காவல்துறையின் முக்கிய அறிவிப்பு!

by Lifestyle Editor
0 comment

நாளை முதல் அமலுக்கு வருகிறது மோட்டார் வாகனத்தில் செல்லும் அனைவருக்கும் காவல்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. காய்கறி கடைகள், மளிகை கடைகள், இறைச்சிக்கடைகள் ஆகியவை மதியம் 12 மணி முதல் இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம் அரசு, தனியார், வாடகை டாக்ஸி மற்றும் ஆட்டோ போன்ற போக்குவரத்து வசதிக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் காய்கறி மார்க்கெட் செல்வதற்காக இருசக்கர வாகனங்களில் யாரும் பயன்படுத்தக்கூடாது
என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காய்கறி கடை அல்லது மளிகை கடை, மருந்தகத்திற்கு செல்பவர்கள் யாரும் இருசக்கர வாகனங்களை பயன்படுத்த கூடாது என்றும் அவ்வாறு தடையை மீறி பயன்படுத்துவோரின் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என்றும் போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்தந்த பகுதியில் உள்ள காய்கறி கடை, மளிகை கடை ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் காவல்துறை அறிவித்துள்ளது. அதனால் நடந்து சென்று நீங்கள் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் கொரோனா காலகட்டத்தில் பணிபுரிய உள்ள தன்னார்வலர்கள் அதற்கான பாஸை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் காவல்துறை அறிவித்துள்ளது. தடையை மீறி செல்வோரின் வாகனங்களை பறிமுதல் செய்து, அபராதம் விதிக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Posts

Leave a Comment