காதலருக்கு தானே சமைத்து தமிழ்நாட்டு ஸ்டைல் விருந்து வைத்து அசத்திய ஸ்ருதி ஹாசன்!

by Lifestyle Editor
0 comment

நடிகை ஸ்ருதி ஹாசன் தனது காதலருக்கு தானே சமைத்து விருந்து வைத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் ஸ்ருதி ஹாசன் தற்போது ஓவியக் கலைஞர் சாந்தனு ஹசாரிகா என்பவரைக் காதலித்து வருகிறார். தற்போது அவருடன் தான் வசித்து வருகிறார். இந்த லாக்டவுன் நேரத்தில் தமிழக உணவு வகைகளை தானே சமைத்து தன் காதலருக்கு விருந்து வைத்துள்ளார் ஸ்ருதி. அந்தப் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் கேக் ஒன்றையும் தயார் செய்து அவருக்கு ட்ரீட் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

இந்த லாக்டவுன் நேரத்தில் ஸ்ருதி சிறந்த சமையல் கலைஞராக மாறி வருவதாக அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், ஸ்ருதி ஹாசன் கடைசியாக மறைந்த இயக்குனர் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லாபம்‘ படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘சலார்’ படத்திலும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment