கூப்பிட்ட கணவர் -மறுத்த மனைவி -அடுத்து மனைவியின் மூக்கில் போடப்பட்ட 15 தையல் .

by Lifestyle Editor
0 comment

குடும்பம் நடத்த வராத மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவரை போலீசார் கைது செய்தனர் .

டெல்லியின் பஹர்கஞ்சில் டாக்ஸி ஓட்டும் 36 வயதான விஜேந்தர் பால்,தனது 31 வயதான மனைவி பிரேர்னா சைனியோடும் அவரின் 11 வயது மகளோடும் வசித்து வந்தார். இந்நிலையில் அந்த கணவர் பால் அவரின் மனைவியை சந்தேகப்பட்டார் ,அதனால் அவர் தினமும் பல கொடுமைகளை சந்தித்து வந்தார் .பின்னர் அவரின் கொடுமை பொறுக்க முடியாத அந்த பெண் தன்னுடைய 11 வயதான மகளோடு அவரை விட்டு பிரிந்து தன்னுடைய பிறந்த வீடான மும்பைக்கு வந்து விட்டார் .

அதன் பிறகு தனியே வசிக்க முடியாத பால் தன்னுடைய மனைவியை தேடி மும்பைக்கு வந்தார் .மே 3 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு வெர்சோவா சோஷியல் பகுதிக்கு வந்து அவர் தன்னோடு குடும்பம் நடத்த வரும்படி அவரை கூப்பிட்டார் .ஆனால் அந்த பெண் வர மறுத்து அவரிடமிருந்து தப்பிக்க ஆட்டோவில் சென்றார் .இதனால் கோவப்பட்ட பால் அவரை துறத்தி சென்று அந்த பெண்ணின் மூக்கை கடித்து துப்பினார் .பிறகு அந்த பெண் வலியால் துடித்து ரத்த வெள்ளத்தில் அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலுக்கு சென்றார் .அங்கு அவரின் மூக்கில் டாக்டர்கள் 15 தையல்கள் போட்டனர் .பின்னர் அந்த பெண் சைனி தன்னுடைய கணவர் மீது பொலிஸில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்

Related Posts

Leave a Comment