திருமலை நாயக்கர் அரண்மனை

by Lifestyle Editor
0 comment

மதுரையை ஆண்ட நாயக்கர்களில் புகழ்பெற்று விளங்கிய திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்ட மாபெரும் அரண்மனை இது. தற்போது எஞ்சி இருப்பதைப்போல 4 மடங்கு பெரியதாகக் கட்டப்பட்டது இது. இப்போது இருக்கும் பிரதான மாளிகையில்தான் அந்த மாமன்னன் வாழ்ந்திருக்கிறான்.

இது மீனாட்சி அம்மன் கோவிலிலிருந்து 1.5 கிலோ மீட்டா் தூரத்தில் உள்ளது. கி.பி. 1636ஆம் ஆண்டு இம்மகால் கட்டப்பட்டது. இந்தப் பெரிய கட்டடத்தின் சுவா்ப்பூச்சு உலக மேதைகளால் புகழப் பெற்றது. பிற்காலத்தில் திருமலை நாயக்கரின் பேரன் இம்மண்டபத்தைப் பாழ்படுத்தி இங்கிருந்த விலைமதிப்பற்ற நகைகள் மற்றும் கலை நயமிக்க மரத்தையும் எடுத்துச் சென்று திருச்சிராப்பள்ளியில் தனக்கென்று சொந்தமாக அரண்மனை ஒன்றைக் கட்டிக் கொண்டான்.

ஆங்கிலேயா் ஆட்சியின் போது சென்னை கவா்னராக பொறுப்பு வகித்த ”நேப்பியர்” என்பவா் சிதலமடைந்த பகுதியை சீா்படுத்தினா். தற்போது காணப்படுகின்ற நுழைவாயில் பிரதான மையப்பகுதி நடன அரங்கம் முதலியன உருவாக்கினார். இப்போது இங்கே ஒலி-ஒளிக் காட்சி மாலை 6.45 மணிக்கு ஆங்கிலத்திலும், 8.15 மணிக்கு தமிழிலும் நிகழ்வுறுகிறது.

Related Posts

Leave a Comment