தலை வலின்னு சொன்ன பெண் -மசாஜ் செய்த வார்டு பாய் -அடுத்து கொரானா சீருடையில் நடந்த கொடுமை

by Lifestyle Editor
0 comment

ஒரு கொரானா வார்டில் இருந்த அட்டெண்டரால் அங்கிருந்த ஒரு பெண் நோயாளி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ராஜ்கோட்டில் ஒரு கொரானா சிகிச்சை மையமிருக்கிறது .அந்த ஆஸ்பத்திரியில் பல கொரானா நோயாளிகள் ஆண் ,பெண் என்ற பேதமில்லாமல் ஒன்றாக அடைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது .அங்கு ஒரு பெண் கொரானாவுக்கு பிறகு சில உபாதைகளால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார் .அப்போது அந்த வார்டில் ஒரு 36 வயதான வார்டு பாய் PPE கிட் அணிந்த படி அந்த பெண்ணை நோட்டமிட்டு அடிக்கடி சுற்றி வந்தார் .

அப்போது கடந்த புதன் கிழமையன்று இரவு அந்த பெண் தனக்கு தலைவலி அதிகமிருப்பதால் தூங்க முடியவில்லை என்று அந்த அட்டெண்டெரிடம் கூறினார் .உடனே அந்த நபர் அந்த பெண்ணுக்கு தலையில் மசாஜ் செய்ய தொடங்கினார் .பின்னர் அங்கிருந்த விளக்கை அணைத்து விட்டு அந்த கொரானா சீருடையுடன் அந்த பெண்ணை பலாத்காரம் செய்து விட்டு ஓடி விட்டார் .அப்போது அந்த வார்டுக்குள் மேலும் சில நோயாளிகள் ஆபத்தான நிலையில் ,மயங்கிய நிலையில் இருந்ததால் அவர்களுக்கு அங்கு நடந்த சம்பவம் தெரியவில்லை .அதன் பிறகு அந்த பெண் இந்த விஷயத்தை தன்னுடைய குடும்பத்தாரிடம் கூறினார் .அதை கேட்ட அவர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த நபர் மீது புகார் கூறினர் .போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரனை மேற்கொண்டு அந்த வார்டு அட்டெண்டரை கைது செய்தனர்.

Related Posts

Leave a Comment