சசிகலாவை சந்திக்கிறார் ஓபிஎஸ்!

by News Editor
0 comment

கருத்துக்கணிப்புகள் பலவும் திமுகவுக்கே சாதகமாக இருப்பதால் அக்கட்சிதான் ஆட்சி அமைக்கப்போகிறது என்றே பல்வேறு தரப்பினரும் உறுதியாக சொல்லி வருகின்றன. இதனால், தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் சசிகலா அதிமுகவை கைப்பற்றப்போகிறார் என்றும், அமமுக என்பது அதிமுகவுக்கு எதிரான தற்காலிக தளம்தான் என்ற பேச்சு இருக்கிறது.

இன்றைக்கு அதிமுகவை தனதாக்கிக்கொண்டு தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அத்துனை பேரும் மோசமாக நிலைக்குத்தான் தள்ளப்படுவார்கள். அதிமுகவில் நடக்கப்போகும் ரசாயண மாற்றத்தில் முதலில் ஓரங்கட்டப்படப் போகிறவர் ஜெயக்குமாராகத்தான் இருக்கும் என்று சொல்லி இருக்கிறார் அதிமுகவில் இருந்து விலகி திமுகவுக்கு சென்றிருக்கும் நாஞ்சில் சம்பத்.

தேர்தலுக்கு முன்னரே சசிகலாவை எப்படியும் அதிமுகவிற்குள் கொண்டு வரவேண்டும் என்று அமித்ஷா முன்னிலையில் ஓபிஎஸ் பேசியதாகவும், அதற்கு ஈபிஎஸ் ஒத்துப்போகவில்லை என்றும் தகவல் பரவியது. அதன் பின்னர், அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்ததும் உங்களூக்கு உரிய மரியாதை கிடைக்கும் என்று கடிதம் மூலமாக சசிகலாவுக்கு ஈபிஎஸ் தெரிவித்ததாகவும் தகவல் பரவியது.

தேர்தல் தொடக்கத்தில் இருந்தே சசிகலாவுக்கு குரல் கொடுத்து வரும் ஓபிஎஸ், நாளை 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தெரியவந்ததும், நாளை மறு தினம் 3ம் தேதி சசிகலாவை சந்திக்க அனுமதி கேட்டிருக்கிறார் என்று, ஆனால் சசிகலா அவருக்கு அனுமதி கொடுக்காமல் இருக்கிறார் என்றும் தகவல். எப்படியும் சசிகலா – ஓபிஎஸ் சந்திப்பு நிகழ்தே தீரும் என்கிறது அமமுக வட்டாரம்.

Related Posts

Leave a Comment