கணவனை துண்டு துண்டாக வெட்டி வீசிய மனைவி…அதிர வைக்கும் சம்பவம்!

by Lifestyle Editor
0 comment

சென்னை மாங்காடு அடுத்த கோவூர் பகுதியில் வசித்து வந்த தம்பதி பாஸ்கர்(37) – உஷா. பாஸ்கர் லாரிகள் வைத்து டிராவல்ஸ் நடத்தி வந்தார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு, பாஸ்கரின் தாயார் தனது மகன், மகள், பேரப்பிள்ளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், உஷா பாஸ்கரை கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

நள்ளிரவு 12 மணிக்கு உஷா ஒரு மூட்டையை தூக்கிக் கொண்டு காரில் சென்றது அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்துள்ளது. அதனிடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில், இன்று காலை சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

உடனே அங்கு சென்ற போலீசார், அங்கிருந்த சடலம் பாஸ்கரின் சடலம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். பின்னர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். டிராவல்ஸ் நடத்தி வரும் பாஸ்கருக்கு ஏராளமான சொத்துக்கள் இருந்துள்ளது. அதை அபகரிப்பதற்காக உஷா தாங்கள் வசித்து வந்த வீட்டில் வைத்து பாஸ்கரை துண்டு துண்டாக வெட்டி கல்குவாரியில் வீசியது அம்பலமானது. பாஸ்கரை கொலை செய்து விட்டு உஷா நகை, பணம் அனைத்தையும் எடுத்துக் கொண்டு தப்பியோடியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment