பாஸ்வேர்டை கொடுக்க மறுத்த பள்ளி மாணவனுக்கு நேர்ந்த கதி!

by Lifestyle Editor
0 comment

டெல்லி பில்குவா பகுதியில் வசித்து வருபவர் மயங்க் சிங் (23). இவர் அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். கடந்த 21ம் தேதி அந்த பள்ளி மாணவனை காணவில்லை என அவரது தந்தை டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில், போலீசார் சிறுவனை தேடும் பணியில் இறங்கியுள்ளனர்.

பிதாம்புரா பகுதியில் இருக்கும் ஒரு பூங்காவில் சிறுவனின் சடலம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மாயமான சிறுவன் தான் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதை உறுதி செய்துள்ளனர். இதையடுத்து அந்த சிறுவனை கொலை செய்தது யார்? என்பதை கண்டறிய அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்துள்ளனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ததில், உயிரிழந்த சிறுவனும் மயங்க் சிங்கும் அந்த பூங்காவினுள் சென்றது பதிவாகி இருந்துள்ளது. அதனடிப்படையில் மயங்க் சிங் தான் சிறுவனை கொலை செய்தார் என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். பில்குவா பகுதியில் தலைமறைவாக இருந்த மயங்க் சிங் போலீசார் வசம் சிக்கியுள்ளார்.

Related Posts

Leave a Comment