17வயது சிறுமி..30 இளைஞர்கள்.. திமுக நிர்வாகி உள்ளிட்ட 28 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

by Lifestyle Editor
0 comment

அயனாவரம் சிறுமி வழக்கை போலவே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது செம்பாக்கம் சிறுமி வழக்கு. செம்பாக்கத்தில் பதினேழு வயது ஏழைச் சிறுமியை சீரழித்த தாம்பரம் தொகுதி திமுக நிர்வாகி தனசேகரன் உள்ளிட்ட 30 பேர் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் இருவர் மட்டுமே சிக்கியுள்ளனர். தனசேகரன் உள்ளிட்ட 28 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே இருக்கும் செம்பாக்கத்தில் தந்தையை இழந்து, தாய்- சகோதரியுடன் வாழ்ந்து வந்த சிறுமி எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். ஏழ்மையினால் வேலை தேடி அலைந்து இருக்கிறார். அப்போது தாம்பரம் சட்டசபைத் தொகுதியின் திமுக வலைதள பொறுப்பாளர் தனசேகரன் தனது ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் சிறுமிக்கு வேலை தருவதாகச் சொல்லியிருக்கிறார்.

சிறுமி வேலைக்குச் சென்ற நாள் முதல் அச்சிறுமியின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார் தனசேகரன். மேலும் சிறுமிக்கு வலுக்கட்டாயமாக மது கொடுத்து சிறுமி போதையில் இருந்த போது தன் நண்பர்களான கார்த்திக் மற்றும் பனங்காட்டு படை கட்சி செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர் மணிகண்டன் ஆகியோரை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்திருக்கிறார்.

ஆறு மாதத்தில் சிறுமி கர்ப்பம் ஆகியிருக்கிறார். உடனே செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிறுமிக்கு 18 வயது ஆகி விட்டதாக பொய் சொல்லி கருக்கலைப்பு செய்துள்ளனர்.

இந்த விவகாரம் குடும்பத்திற்கு தெரிந்ததும் அவர்கள் தனசேகரனை கோபத்துடன் கேட்டபோது, கட்சி அதிகாரத்தை பயன்படுத்தி சிறுமியையும் குடும்பத்தினரையும் மிரட்டி இருக்கிறார் தனசேகரன். இதன் பின்னர்தான் மிக மோசமான நடந்து கொண்டிருக்கிறார் தனசேகரன்.

தனக்குத் தெரிந்த அரசியல் பிரமுகர்கள், அதிகார பலம் மிக்க இளைஞர்கள் பலருக்கும் சிறுமியை விருந்தாக்கியிருக்கிறார் தனசேகர். 30க்கும் மேற்பட்ட இளைஞர்களால் சிறுமி சீரழிவுக்கு உண்டாவதை அறிந்த சமூக ஆர்வலர் ஒருவர் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்திருக்கிறார். அவர் அளித்த புகாரின் பேரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்த கட்டிட வேலை செய்யும் கார்த்திக், வழக்கறிஞர் அலுவலகத்தின் உதவியாளர் மணிகண்டன் (இவர் புதுமாப்பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது) இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

தனசேகரன் உள்ளிட்ட 28 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கை வாபஸ் வாங்குமாறு சிறுமியின் குடும்பத்திற்கு கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதால் குடும்பத்திற்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அயனாவரம் சிறுமி வழக்கை போலவே செம்பாக்கம் சிறுமி வழக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

Related Posts

Leave a Comment