பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை… ஆசிரியர் சஸ்பெண்ட்!

by Lifestyle Editor
0 comment

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும் 9ஆம் வகுப்பு மாணவிக்கு, அப்பள்ளியில் பணியாற்றும் கணித ஆசிரியர் கோவிந்தன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். கடந்த 21ஆம் தேதி உலர் உணவுப் பொருட்களை வாங்கி வர அந்த மாணவி தனது நண்பர்களுடன் பள்ளிக்கு சென்றிருக்கிறார். மாணவி தனி அறையில் இருந்த போது, கோவிந்தன் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இதுகுறித்து அம்மாணவி தனது பெற்றோரிடம் தெரிவிக்க, ஆத்திரமடைந்த பெற்றோர் மறுநாள் காலை கோவிந்தனின் வீட்டுக்கே சென்று அவரை அடித்து உதைத்துள்ளனர். மேலும், பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கோவிந்தன் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், பள்ளி மாணவிக்கு கோவிந்தன் பாலியல் தொல்லை கொடுத்தது தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் கவனத்திற்கு எட்டியது. இது குறித்து துறை ரீதியான விசாரணை மேற்கொண்ட அவர், கோவிந்தனை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Posts

Leave a Comment