பிளாக்கில் விற்கப்படும் கொரானா மருந்துகள் -தண்ணீரை ஊசியாக போட்ட வார்டு பாய் -கொரானா சிகிச்சையில் கொடுமை .

by Lifestyle Editor
0 comment

நாட்டில் கொரானா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இதை பயன்படுத்தி பலர் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கிறார்கள் . அவர்கள் கொரானாவுக்கு வழங்கப்படும் மருந்து பொருட்களை ப்ளாக் மார்க்கெட்டில் விற்று அதிக லாபம் சம்பாதிக்கின்றனர் .

உத்தரபிரதேசத்தின் மீரட்டில் ரெம்ட்சிவிர் ஊசி மருந்துகளை ப்ளாக் மார்க்கெட்டில் இரண்டு வார்டு பாய் விற்றதாக கூறப்படுகிறது.
மீரட்டின் சுபார்தி மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் இரண்டு வார்டுபாயும் இந்த ஊசி மருந்துகளை தலா ரூ .25,000 க்கு விற்றுள்ளர்கள் மேலும் அந்த ஹாஸ்ப்பிட்டலில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அந்த வார்டு பாய் வெறும் தண்ணீர் ஊசி போட்டனர்

அந்த வார்டு பாய்கள் மருத்துவமனையில் இருந்து ரெம்டிசீவர் ஊசியை வெளியே விற்று விட்டு , அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு காய்ச்சி வடிகட்டிய நீரை ஊற்றி ஊசி போட்டார்கள் . இது பற்றி கேள்விப்பட்ட இரகசிய போலீசார் , குற்றம் சாட்டப்பட்டவர்களைத் கண்காணித்தபோது இந்த குற்ற நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்பட்டன.
இந்த வழக்கு தொடர்பாக 6 பேரை போலீஸ் அதிகாரிகள் கைது செய்தனர் . குற்றம் சாட்டப்பட்ட வார்டு பாய்களை கைது செய்தபோது, மருத்துவமனையில் இருந்த நான்கு பவுன்சர்கள் காவல்துறையினரை தாக்கினர் .

குற்றம் சாட்டப்பட்ட அத்தனை பேரும் ஊசி விற்ற கும்பலைச் சேர்ந்தவர்கள். அந்த குற்றம் சாட்டப்பட்ட வார்டு பாயிடமிருந்து 81 குப்பிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இது பற்றி காவல்துறை துணை கமிஷனர் கூறுகையில், “நாடு முழுவதும் கொரானா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மற்றும் பிற மருந்துகளின் பற்றாக்குறை குறித்து மோசடி செய்பவர்களுக்கு நன்கு தெரியும். அவர்கள் இந்த மருந்துகளை பதுக்கி அவற்றை கறுப்புச் சந்தையில் அதிக விலைக்கு விற்றனர். . அவர்கள் ரெம்டெசிவிர் ஊசி மருந்துகளை ஒரு குப்பிக்கு 25,000 முதல், 000 40,000 வரை விற்றுக் கொண்டிருந்தனர்.”என்றார்

Related Posts

Leave a Comment