கள்ளக்காதலை கண்டித்த கணவர் அடித்துக்கொலை… மனைவி, ஆண் நண்பர் கைது!

by Lifestyle Editor
0 comment

தேனி

கம்பம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை அடித்துக்கொன்ற மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் கம்பம் அடுத்த குள்ளப்பகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார் (37). இவர் தனியார் நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி வைஷ்ணவி (25). இவர்களுக்கு 7 வயதில் கனிஷ்கா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தம்பதியினர் சத்தம் கேட்டுள்ளது.

இதனால், அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது, அருண்குமார் வீட்டில் சடலமாக கிடந்து உள்ளார். தகவறிந்த கூடலூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இதுகுறித்து கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அருண்குமார் மனைவி வைஷ்ணவிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜெயசந்திரன் (26) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று அதிகாலை இதுகுறித்து அருண் – வைஷ்ணவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது.

அப்போது, ஜெயச்சந்திரனை வீட்டிற்கு வரவழைத்த வைஷ்ணவி, இருவரும் சேர்ந்து அருண்குமாரை தாக்கி உள்ளனர். இதில் அவர் உயிரிழந்ததால், வைஷ்ணவி தனது பெற்றோருடன் வீட்டிலிந்து தப்பிச்சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து, தலைமறைவான வைஷ்ணவி மற்றும் ஜெயச்சந்திரனை நேற்று போலீசார் கைதுசெய்தனர்.

Related Posts

Leave a Comment