மறைமலைநகரில் பயங்கரம்; அதிமுக பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை

by Lifestyle Editor
0 comment

அதிமுக பிரமுகர் திருமாறன் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகரில் நடந்த இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

ரியல் எஸ்டேட் அதிபரும், அதிமுக பிரமுகருமான திருமாறன், மறைமலைநகரில் வசித்து வந்தார். திருமாறன் உயிருக்கு ஆபத்து இருந்த காரணத்தினால் அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

திருமாறன் இன்று மனைவியுடன் கோவிலுக்கு சென்றார். பாதுகாப்பு போலீசும் உடன் சென்றார். கோவிலுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்தபோது, திருமாறன் மீது மர்ம கும்பலைச் சேர்ந்தவர்கள் வெடிகுண்டு வீசினர். இதில் சம்பவ இடத்திலேயே திருமாறன் உயிரிழந்தார்.

திருமாறன் மீது வெடிகுண்டு வீசிய உடனேயே, அந்த மர்ம கும்பலை நோக்கி திருமாறனுக்கு பாதுகாப்பாக வந்த போலீஸ் சுட்டதில், 4 பேர் கொண்ட அந்த கும்பலைச் சேர்ந்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

தப்பியோடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். காயம்பட்ட திருமாறன் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Posts

Leave a Comment