நடிகர் விவேக் காலமானார்

by News Editor
0 comment

டிகர் விவேக் காலமானார்

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் காலமானார்

சிகிச்சை பலனின்றி அதிகாலை 4.35 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல்

மாரடைப்பு காரணமாக நேற்று காலை சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் விவேக் காலமானார்

இன்னும் சற்று நேரத்தில் விவேக்கின் உடல் அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது

100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிகர் விவேக் நடித்துள்ளார்

2020 ஆம் ஆண்டு தாராள பிரபு என்ற படத்தில் கடைசியாக நடித்தார் விவேக்

மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தில் 1987 ஆம் ஆண்டு விவேக் அறிமுகம் ஆனார்

சிறந்த நடிகருக்கான பத்மஸ்ரீ உள்பட பல்வேறு விருதுகளை பெற்றவர் விவேக்

சுற்றுச்சூழல் ஆர்வலராக விளங்கிய நடிகர் விவேக், மரக்கன்றுகள் நடுவதை வலியுறுத்தி வந்தார்

தமிழகம் முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

கோவில்பட்டியில் 1961 ஆம் ஆண்டு பிறந்தவர் நடிகர் விவேக்

திரைப்படங்களில் மூடநம்பிக்கைகளை சாடியதால் சின்னக் கலைவாணர் என்று அழைக்கப்பட்டவர் விவேக்

நடிகர் விவேக்கை, இயக்குனர் பாலசந்தர் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார்

விவேகம் மிக்க கருத்துக்களை காமெடியாக மக்கள் மனதில் விதைத்த வித்தகர் விவேக்

அப்துல்கலாமின் கனவுக்கு உருவம் கொடுத்து வந்த விவேக் சமூக ஆர்வலராக விளங்கினார்

நகைச்சுவையுடன் சமூகத்திற்கு தேவையான உன்னத கருத்துக்களை எடுத்துரைத்தவர் விவேக்

Related Posts

Leave a Comment