வேகமெடுக்கும் கொரோனா.! முதன்முறையாக அனைத்து மாநில கவர்னர்களையும் அழைத்த பிரதமர் மோடி.!

by News Editor
0 comment

கடந்த ஆண்டு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் ஏராளமானோர் உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்தது. கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன .

இந்தநிலையில், பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை கூட்டங்களை அடிக்கடி நடத்தி வருகிறார். அந்தவகையில் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் கடந்த 8-ஆம் தேதி ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தநிலையில், முதல் முறையாக மாநில கவர்னர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

அந்த ஆலோசனை கூட்டத்தில் நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகள், தடுப்பூசி செலுத்தும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

Related Posts

Leave a Comment