அரக்கோணம் இரட்டை கொலை வழக்கில் பாமகவிற்கு தொடர்பு இல்லை!

by Lifestyle Editor
0 comment

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அருகே உள்ள சோமனூர் காலனியில் தேர்தல் முன்விரோதம் காரணமாக அர்ஜுனன், சூர்யா ஆகிய இரு இளைஞர்கள் தனது நண்பர்களுடன் இணைந்து குருவராஜப்பேட்டையிலுள்ள கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்குவந்த கும்பல் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுட, கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்டவற்றை கொண்டு கொடூரமாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அர்ஜுனனும் சூர்யாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தேர்தல் தொடர்பாகவே அர்ஜூனும் அவரது நண்பர்களும் பேசிக் கொண்டிருந்ததாகவும், கொலை செய்தவர்கள் பாமகவை சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்பட்டது. இந்தக் கொலைகளுக்கான காரணம் சாதியோ, தேர்தலோ, அரசியலோ இல்லை எனவும் பாமக மீது அவதூறு பரப்பிவருவதாகவும் அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில், அரக்கோணம் இரட்டை கொலை வழக்கில் பாமகவிற்கு தொடர்பு இல்லை என ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி தலைமையிலான விசாரணை குழு தகவல் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment