“மாஸ்க் போடாதவங்களுக்குலாம் பெட்ரோல் கொடுக்குறது இல்ல” – சுகாதார துறை அதிரடி!

by Lifestyle Editor
0 comment

இந்தியா முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலையின் வேகம் அதிதீவிரமாக இருக்கிறது. தமிழகம், புதுச்சேரியிலும் பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. நிலைமை மேலும் மோசமாகக் கூடாது என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தடுப்பூசி போடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் விதிக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இச்சூழலில் புதுச்சேரியில் பெட்ரோல் பங்குகளில் மாஸ்க் அணியாமல் வருபவர்களின் வாகனங்களுக்குப் பெட்ரோல் கிடையாது என்று சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, மாஸ்க் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் நிரப்பப்படும் என தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவித்திருந்தது. தமிழகம் முழுவதும் பல்வேறு பெட்ரோல் நிலையங்களில் மாஸ்க் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் நிரப்படப்படுவதில்லை. தற்போது புதுச்சேரியிலும் இந்த விதிமுறை அமலாகி உள்ளது.

Related Posts

Leave a Comment