இதெல்லாம் செய்யுங்க…கொரோனா வராதாம்!!

by Lifestyle Editor
0 comment

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுமோ என்ற அச்சம் மத்திய மாநில அரசுகள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24மணிநேரத்தில் 1,52,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஒரேநாளில் 839 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றுக்கு இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,69,275 ஆக உயர்ந்துள்ளது.அதேபோல் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5 ,989 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. அதில், வழிபாட்டுத் தலங்களில் இரவு 10 மணிவரை அனுமதி, அத்துடன் விடுமுறை நாட்களில் கடற்கரைகளில் மக்கள் கூட தடை, தியேட்டரில் 50% இருக்கைகளுடன் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சூழலில் கொரோனா பரவல் உச்சத்தை தொட்டு வரும் நிலையில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை இங்கு காணலாம்.

முகக்கவசம் அணிவது கட்டாயம். முகக்கவசம் அணியாமல் வெளியில் செல்வதை தவிர்த்து விடுங்கள்

தும்மல், இருமல் வரும் போது கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பரை பயன்படுத்தலாம்.

தனிநபர் இடைவெளி மிக முக்கியம்

சாப்பிடும் முன்பும் கைகளை 20 வினாடிகள் சோப்பு அல்லது ஹேண்ட்வாஸ் போட்டு சுத்தம் செய்து கொள்ளுங்கள்

கூட்ட நெரிசலைத் தவிர்த்து விடுங்கள்

கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து கொள்ளுங்கள்

அனைவரும் மறக்காமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்

தும்மலின் போது டிஷ்யூ பேப்பரை பயன்படுத்திவிட்டு அதை முறையாக குப்பைத்தொட்டியில் போடவும்

அடிக்கடி உங்கள் கைகளை மூக்கு, கண் மற்றும் வாய் பகுதிக்கு கொண்டு செல்லாமல் இருங்கள்

உடல்நிலை சரியில்லாத நபர்கள் அருகில் செல்வதை தவிர்த்து விடுங்கள்

அதிக உடல் வெப்பம், இருமல், சுவாச கோளாறு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள சுகாதார நிலையத்திற்கு சென்று பரிசோதித்துக் கொள்வது நல்லது.

Related Posts

Leave a Comment