கொரோனா தடுப்பு நடவடிக்கை- 35 மாவட்டங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

by Lifestyle Editor
0 comment

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாளொன்றுக்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், வரும் 10ஆம் தேதி முதல் கடுமையான கட்டுப்பாடுகளை தமிழக அரசு இன்று அறிவித்தது. கொரோனா முதல் அலையின் போது பின்பற்றப்பட்ட முழு ஊரடங்கை போல் இல்லாமல் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், ஷோ ரூம்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட வாரியாக கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மண்டல வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கத்தை குறைக்க 15 மண்டலங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளாக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 35 மாவட்டங்களிளுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Posts

Leave a Comment