105 வயது.. 1952 முதல் அனைத்து தேர்தல்களிலும் தவறாது வாக்களித்த முதியவர்.!

by News Editor
0 comment

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதில் பல தனித்துவமான, சுவாரஸ்யமான விஷயங்களும் அரங்கேறி வருகின்றன. இதில் 105 வயதான முதியவர் ஒருவர் சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்த பெருமையை பெற்றுள்ளார்.

1952 முதல் 2021 சட்டமன்ற தேர்தல் வரை தவறாது வாக்களித்துள்ளார் மாரப்ப கவுண்டர். இவருக்கு வயது 105. இந்தத் தேர்தலிலும் நீண்ட தூரம் நடந்து வந்து வரிசையில் நின்று தன்னுடைய வாக்கை பதிவு செய்துள்ளார்.

கோவை கருப்பராயன் பாளையத்தைச் சேர்ந்த மாரப்ப கவுண்டர் 1916 ஆம் ஆண்டு ஜீன் 1 ஆம் தேதி பிறந்தவர். தற்போது அவரது வயது 105

விவசாயியான இவருக்கு 1 மகன், 3 மகள்கள், 4 பேரன்கள் மற்றும் 4 பேத்திகள் உள்ளனர். காமராஜர் மற்றும் காந்தியடிகள் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களின் பங்களிப்புகளையும் தான் பார்த்துள்ளதாக கூறினார்.

மக்களுக்கு நல்லது செய்யும் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்ய அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என அனைவரையும் வலியுறுத்தினார். 105 வயதிலும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளோடு மாரப்ப கவுண்டர் தனது ஜனநாயகக்கடமையை ஆற்றியிருப்பது பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

Related Posts

Leave a Comment