அஜித், விஜய் வாக்களித்தது இந்த கட்சிக்கு தானா? அம்பலமான ரகசியம்

by News Editor
0 comment

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பயங்கர விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், தற்போது அதிகம் பேசப்படுவது நடிகர் விஜய் எதனால் சைக்கிளில் வந்தார் என்பதே.

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே செய்து வருகின்றனர்.

அந்த வகையில் அஜித், விஜய், சூர்யா, கார்த்தி என பிரபலங்கள் தங்களது வாக்குகளை பதிவிட்டு சென்றுள்ளனர். இதில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது விஜய் சைக்கிளில் வந்ததும், அஜீத் ரசிகரின் மொபைல் போனை கோபமாக பிடுங்கியதுமே..

ஆம் விஜய் யாரும் எதிர்பாராத வகையில் சைக்கிளில் வாக்களிக்க வந்ததற்கு காரணம் என்ன என்று தகவல் ஒன்று தீயாய் பரவி வருகின்றது.

சைக்கிளில் வந்த விஜய்யின் பிரைவேசியை ரசிகர்கள் கெடுக்கும் விதமாகவே நடந்துகொண்டனர். பின்பு தனது வாக்கினை பதிவு செய்த விஜய், வீட்டுக்கு திரும்பும் போது பைக்கில் சென்றார். அப்போதும் ரசிகர்களும் அவரை பின் தொடர்ந்து செல்ஃபி எடுக்க முயற்சித்தனர்.

ஒரு வேளை பெட்ரோல் விலை அதிகரித்ததை கிண்டல் செய்வதற்காக விஜய் இப்படி செய்தாரோ என்பது சில ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வினை நூதனமாக எதிர்ப்பு தெரிவிக்கவே இவ்வாறு சைக்கிளில் வந்துள்ளதாக ரசிகர்களின் தரப்பு தற்போது கருத்துக்களை முன்வைத்துள்ளது.

அதே போன்று அஜீத் அணிந்திருந்த மாஸ்க் நிறத்தினையும் விஜய் அணிந்து வந்த மாஸ்க் மற்றும், சைக்கிள் இவற்றின் நிறம் கருப்பு, சிகப்பு என்பதையும் ரசிகர்கள் கோர்த்து விட்டுள்ளனர். ஒருவேளை திமுக-விற்கு வாக்களித்திருப்பாரா என்றும் சைக்கிளில் வந்ததால் தமிழ் மாநில காங்கிரஸிற்கு வாக்களித்திருப்பார் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை அள்ளிவீசி வருகின்றனர். ஆனால் உறுதியாக திமுகாவிற்கு வாக்களித்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment