தீவிரமாக பரவும் கொரோனா பரவல்.! மீண்டும் கடுமையாகும் முழு ஊரடங்கு.!

by News Editor
0 comment

மகாராஷ்டிராவில் இன்று முதல் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரானா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. ஆரம்பத்தில் இந்தியாவில் கொரானா வைரஸ் தீவிரமாக பரவியதால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்தியாவில் படிப்படியாக கொரானா வைரஸ் பரவல் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

இந்தியாவிலேயே அதிகமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் தீவிரமாக அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 57 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு தீவிரமாக பரவும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கின்போது மருந்தகங்கள், காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தவிர ஏனைய கடைகள் இரவு நேரத்தில் இயங்காது. வணிக வளாகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள் உள்ளிட்டவை இந்த மாதம் இறுதி வரை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கின்போது பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளை தவிர பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment