புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் திருவிழா ஆரம்பம்

by Lankan Editor
0 comment
புளியம்பொக்கனை, நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் திருவிழா
புளியம்பொக்கனை, நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் திருவிழா
புளியம்பொக்கனை, நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் திருவிழா

வரலாற்றுச் சிறப்புமிக்க கரைச்சி, புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை விசேட வழிபாடுகளைத் தொடர்ந்து விளக்கு வைத்தல் வைபவத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது.

இந்தத் திருவிழாவில் இறுதியாக எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு பங்குனி உத்தரப் பொங்கல் விழா நடைபெறவுள்ளது.

இவ் ஆலயத்தின் காலம் காலமாக பாரம்பரிய முறைப்படி நேற்றுக் காலை ஏழு மணிக்கு விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து விளக்கு வைக்கப்பட்டு பண்டைய மரபுகளுக்கு அமைவாக மீசாலை புத்தூர் சந்தியில் இருந்து பண்டம் எடுத்து வருவதற்காக மாட்டு வண்டிகளில் அடியார்கள் ஆலயத்தில் இருந்து புறப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி இரவு ஆலயத்தை வந்தடைந்தவுடன் பொங்கல் விழா நடைபெறும்.

இவ்வாண்டு, கொரோனா தொற்றினைக் கருத்திற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட அடியார்களே அனுமதிக்கப்படுவதுடன் நேர்த்திகளை நிறைவேற்றுபவர்கள் விரைவாக ஆலயத்தில் இருந்து வெளியேறி நேர்த்திக்கடன்களை செய்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

அந்தவகையில், நேற்று முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை காவடி. பாற்செம்பு மற்றும் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொங்கல் காலத்தில் ஆலயச் சூழலில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கோ வெளிமாவட்டங்களில் இருந்து வருகின்ற பொதுப் பேருந்து சேவைகளுக்கோ எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை.

கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து மட்டும் அடியவர்களின் நன்மை கருதி போக்குவரத்துச் சேவை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

இதேவேளைஇ பொங்கல் உற்சவம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்று கூட்டத்திற்கு அமைவாக பொங்கல் விழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment