உலகில் கைவிடப்பட்ட திகில் நிறைந்த தீவு! நீருக்குள் மூழ்கியது எப்படி? இன்றும் இருள் சூழ்ந்து அப்படியே இருக்கும் மர்மம்

by News Editor
0 comment

வரலாற்றின் முன் பக்கங்களில் இயங்கிக்கொண்டும், மனிதர்களுக்கு வசிப்பிடமாகவும் இருந்த பல இடங்கள் இன்று சூனியமாய்க் கிடக்கின்றன.

அவற்றிற்குப் பின்னால் இருக்கும் மர்மக் கதைகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றன.

அப்படி சுவாரஷ்மான இடங்களைக் கீழே காணலாம்.

நீருக்குள் மூழ்கிப்போன நகரம்

சீனாவின் செஷங் மாகாணத்தில் 1959 ஆம் ஆண்டு நீர்மின் நிலையம் ஒன்று கட்டப்பட்டது. நீர்பிடிப்புப் பகுதிக்குள் இருந்த இந்த நகரத்தைக் காலி செய்துவிட்டு மக்கள் வெளியேறுமாறு அரசின் சார்பில் உத்தரவிடப்பட்டது.
நிலையமானது பயன்பாட்டிற்கு வந்தபின்னர் ஒட்டுமொத்த நகரமும் நீருக்குள் மூழ்கிப்போனது.

அவை நடந்து சுமார் 60 ஆண்டுகள் கடந்தும் இந்த இடம் அதேபோல் இருக்கிறது, ஒரு சேதமும் இல்லாமல்.

ஹாஷிமா தீவு

கடலுக்கு அடியில் இருந்த நிலக்கரிச் சுரங்கத்தினால் புகழ்பெற்றிருந்த இந்த தீவில் ஏராளமான மக்கள் வசித்து வந்தார்கள்.

நிலக்கரிக்குப் பதிலாக பெட்ரோலைப் பயன்படுத்த அரசு சட்டத்திருத்தம் கொண்டுவந்ததன் விளைவாக மக்கள் தொகையானது குறைந்துவிட்டது.

தற்போதைய நிலையில் இந்தத் தீவில் யாருமே வசிக்கவில்லை.

ஹாலந்து தீவில் இருக்கும் வீடு

அமெரிக்காவின் செசாபீக் (Chesapeake) விரிகுடாவில் உள்ள ஹாலந்து தீவில் ஒரே ஒரு வீடு மட்டும் தனித்துக்கிடக்கிறது.

இங்கு யார் வாழ்ந்தார்கள் என்பது பற்றிய குறிப்புகள் சரிவரக் கிடைக்கவில்லை. 2010 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இந்தவீடு கடுமையான சேதமடந்துவிட்டது.

ரஷிய மர வீடுகள்

ரஷியாவின் கடும் பணி பிரதேசங்களில் உள்ள காடுகளில் இந்த வீடுகள் இருக்கின்றன.

பனி மற்றும் அடர் காடுகளுக்கு உள்ளே இருக்கும் இந்த வீடுகளில் யாரும் வசிப்பதில்லை. சாகச உணர்விற்காக அங்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

 

Related Posts

Leave a Comment