ஒரே ஒரு போட்டோ! வைரலாகும் ராகுல் காந்தியின் புகைப்படம்- அப்படி அதில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?

by News Editor
0 comment

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் எம்பி-யான ராகுல் காந்தி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில், மீனவர்களுடன் கலந்துரையாடினார்.

பின்னர் அவர்களுடன் படகில் சென்ற போது, மீனவர்களுடன் சேர்ந்து நடுக்கடலில் திடீரென குதித்தார்.

சுமார் 10 நிமிடங்கள் கடலுக்குள் நீந்திய பின்பு படகில் ஏறினார், இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகின.

அதில் ஒரு புகைப்படத்தில், ராகுல் காந்தியின் ஈரமான டி-ஷர்ட்டில் வயிற்று தசைகள் (6 பேக்ஸ்) தெளிவாக தெரிகிறது.

இந்த போட்டோவை அதிகமாக பகிர்ந்து வரும் நெட்டின்சன்கள், உடல்பயிற்சி தொடர்பாக டிப்ஸ் தரும்படி ராகுல்காந்தியிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், ராகுல் காந்தியின் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ஒரு குத்துச் சண்டை வீரரின் ஆப்ஸ் (வயிற்று தசைகள்) என்று பதிவிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment