ஒரே வாரத்தில் இழந்த ஆண்மையை அதிகரிக்க வேண்டுமா?… இந்த ஒரு உணவே போதுமாம்…!

by News Editor
0 comment

நட்ஸ் உணவு வகைகளில் நிறைய புரதம், சிறிதளவு கொழுப்புச் சத்து, வைட்டமின் பி அடங்கியுள்ளது.

அதிலும், வேர்க்கடலையில் தையாமின் மற்றும் நிகோடினிக் அமிலம் போன்ற வைட்டமின் பி சத்துக்கள் நிறைந்துள்ளது.

போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, வைட்டமின்கள் ஆகியவை வேர்க்கடலையில் நிறைந்துள்ளன.

வேர்க்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்குக் கிடைக்கவும் பயன்படுகிறது.

குறிப்பாகப் பெண்கள் நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பற்கள் மற்றும் எலும்புகளை வலுவடையச் செய்து, மூளையையும் சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும்.

மேலும், வேர்க்கடலையை நாள்தோறும் 30 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும்.

உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நிலக்கடலை சாப்பிடலாம்.

வேர்க்கடலையை தினசரி சாப்பிடும் ஆண்களுக்கு பாலியலில் ஈடுபாடு அதிகரிக்கிறது என்பது ஆய்வுகளிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேர்க்கடலையில் உள்ள வைட்டமின் இ உள்ளிட்ட சத்துக்கள் உங்களுடைய உடலை பாலியலில் மிகவும் ஆர்வமாக ஈடுபடச் செய்யும்.

பாலுறுப்புகளுக்கான இரத்த ஓட்டத்தை மிகைப்படுத்துகிறது. விந்தணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது.

பொதுவாக பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று அனைவரும் எண்ணுகிறார்கள். ஆனால், நிலக்கடலையில்தான் இவற்றையெல்லாம் விட சத்துக்கள் உள்ளன.

Related Posts

Leave a Comment