கொரோனா விவகாரத்தில் பிரித்தானிய பிரதமரின் முடிவை எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

by Lankan Editor
0 comment

பிரித்தானியாவில் தேசிய ஊரடங்கானது நான்கு கட்டமாக தளர்த்த பிரதமர் ஜோன்சன் தலைமையிலான அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் முக்கிய விஞ்ஞானிகள் மூன்றாவது கொரோனா அலை தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், பிரித்தானியாவில் மார்ச் 8 முதல் நான்கு கட்டங்களாக தேசிய ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளது.

ஆனால் தற்போதைய சூழலில், இது மிகவும் துரிதமான நடவடிக்கை என விஞ்ஞானிகள் தரப்பு கருத்து தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, பிரித்தானியாவில் ஜூலை மாதம் தொடங்கி கொரோனாவின் மூன்றாவது அலைக்கு வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மூன்றாவது அலை, மெதுவாக 2021 ஆம் ஆண்டின் இறுதிவரை நீடிக்கும் எனவும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி மே வரையிலான காலகட்டத்தில், பிரித்தானியாவில் கொரோனா பரவல் உச்சம் கண்டது போன்ற ஒரு நிலை, இந்த ஆண்டு ஜூலை முதல் ஏற்படும் எனவும்,

இதனால் பிரித்தானியாவில் 30,000 முதல் 80,000 வரை இறப்பு எண்ணிக்கை இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மிகவும் வெற்றிகரமாக தடுப்பூசி வழங்கம் திட்டம் முன்னெடுக்கப்பட்டு இருந்தபோதிலும் மற்றொரு கொடிய அலையின் அச்சுறுத்தல் இருப்பது கவலையளிப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் பலனளிக்க கூடியது அல்ல என்பதாலும், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் சிலருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படுவதும்,

அவர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் பாதிக்கப்படுவதும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர் பிரித்தானிய உயர்மட்ட விஞ்ஞானிகள்.

Related Posts

Leave a Comment