தேசிய அளவிலான துப்பாக்கிச் சூடு போட்டிக்காக வெறித்தனமான பயிற்சியில் அஜித்!

by Lifestyle Editor
0 comment

நடிகர் அஜித்குமார் நடிப்பு மட்டுமல்லாது ரேஸிங், புகைப்படக் கலைஞர், சிறிய ரக விமானங்கள் ஓட்டுவது, வடிவமைப்பது என பல திறமைகளைக் கொண்டவர். அதில் துப்பாக்கிச் சூடு முக்கியத் திறமையாகக் கருதலாம்.

தற்போது அஜித் தேசிய அளவிலான துப்பாக்கிச் சூடு போட்டிக்குத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சமீப காலமாக அஜித் துப்பாக்கிச் சூட்டில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான ரைபிள் ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்தாண்டு நடக்கவிருக்கும் போட்டிக்காகவும் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார். சென்னை ரைபிள் கிளப்பில் இணைந்து போட்டிகளுக்குத் தயாராகி வருகிறார். சமீபத்தில் அஜித் ரைபிள் கிளப் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இறுதி கட்ட படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது. விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment