கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் திடீர் உடைப்பு… சாலையில் வீணாக வழிந்தோடிய குடிநீர்…

by Lifestyle Editor
0 comment

தர்மபுரி

பாலக்கோடு பகுதியில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பினால், பல ஆயிரம் லிட்டர் குடிநீர் சாலையில் வெளியேறி வீணாகியது.

தர்மபுரி மாவட்டம் ஒக்கேனக்கல் காவிரி ஆற்றில் இருந்து, கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் ராட்சத குழாய்கள் மூலம் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு புறவழிச்சாலை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ராட்சத குழாயில் இன்று பிற்பகல் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் குழாயில் இருந்து பல அடி உயரத்திற்கு தண்ணீர் பிய்ச்சி அடித்து வெளியேறி வருகிறது.

உடைப்பு காரணமாக பல லட்சம் லிட்டர் குடிநீர் சாலையில் வழிந்தோடி வீணாகி வருகிறது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே சாலையில் அருவி போல குடிநீர் வெளியேறி வருவதை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து பார்வையிட்டு சென்றனர்.

Related Posts

Leave a Comment