லொஸ்லியாவைக் காதலிக்கும் பிரபல நடிகர்… உண்மையை வெளிப்படையாக போட்டுடைத்த மற்றொரு நடிகர்

by News Editor
0 comment

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த லொஸ்லியா தற்போது ஹர்பஜன் சிங் உடன் ப்ரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

தற்பொழுது லொஸ்லியா தொடர்பில் ஹர்பஜன் சிங் மற்றும் நகைச்சுவை நடிகர் சதீஷின் ட்விட்டர் உரையாடல்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றது.

இப்படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார். வில்லனாக பிரபல நடிகர் அர்ஜூனும், நகைச்சுவை கேரக்டரில் சதீஷூம் நடிக்கின்றனர்.

ஹீரோவாக ஹர்பஜன் சிங்கும் வில்லனாக அர்ஜூனும் நடித்து வருவதால் படத்தின் மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் சதீஷ் ஃபிரெண்ட்ஷிப் படக்குழுவினருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, என்றும் தொடரும் இந்த நட்பு. லவ் யூ ஹர்பஜன், லாஸ்லியா என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் சதீஷின் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த நடிகர் ஹர்பஜன் சிங், “மச்சி என்ன இப்பிடி பச்சயா பொய் சொல்ற நீ லாஸ்லியாவை தான லவ் பன்றேன்னு சொன்ன. அன்னிக்கு இந்த விஷயம் தெரியுமா ?? நம் நட்பு என்றும் தொடரும் தோழா” என்று கூறினார்.

இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த நடிகர் சதீஷ், “அய்யய்யோ எனக்கே இந்த விஷயம் இப்பதான தெரியும். லாஸ்லியாவை ஒரு தோழியாக லவ் யூ என்று சொன்னேன்” என நகைச்சுவையாக கூறியுள்ளார்.

அத்தோடு ஹர்பஜன் சிங் – நடிகர் சதீஷ் இடையேயான இந்த நகைச்சுவையான பதிவுகள் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

Related Posts

Leave a Comment