பிரித்தானியாவில் அபூர்வ மோதிரத்தை விற்க முயன்றபோது சிக்கிய நபர்… இளவரசி வீட்டில் நிகழ்ந்த மாபெரும் திருட்டு கண்டுபிடிப்பு

by News Editor
0 comment

லண்டனில் அமைந்துள்ள இளவரசி ஒருவரின் வீட்டிலிருந்து பெரு மதிப்பிலான நகைகள் திருடப்பட்ட விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் வாழும் கொலம்பியா நாட்டவரான Henao Taba (37) என்பவர், வைர மோதிரம் ஒன்றை விற்க முயன்றுள்ளார்.

ஆனால், அந்த மோதிரம் போல் உலகில் மொத்தமே ஆறு மோதிரங்கள் மட்டுமே உள்ளன என்பதால், சந்தேகமடைந்த நகைக்கடைக்காரர் பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.

Tabaவை விசாரித்த பொலிசாருக்கு அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று காத்திருந்தது. ஆம், அந்த மோதிரம் மட்டுமல்ல வேறு பல விலையுயர்ந்த நகைகளை Taba இதேபோல் பல்வேறு இடங்களில் விற்றுள்ளார்.

அந்த நகைகள், ஜோர்டான் இளவரசியான Firyal (75)க்கு சொந்தமான லண்டன் வீட்டிலிருந்து திருடப்பட்டுள்ளது தெரியவந்தது.

லண்டனில் இருக்கும் இளவரசி Firyalஇன் வீட்டில், Virgilina Taba (65) என்ற கொலம்பிய நாட்டு பெண் வேலை செய்து வந்துள்ளார்.

அவர், இளவரசி வீட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக, வைர மோதிரங்கள், கைக்கடிகாரங்கள், கம்மல்கள் மற்றும் ஆடம்பர கைப்பைகளை திருடி, தனது உறவினரான Tabaவிடம் கொடுத்துள்ளார், Taba அவற்றை விற்றுவந்துள்ளார்.

இதுவரை Virgilinaவும் அவரது உறவினரான Tabaவும் திருடிய நகைகளின் மதிப்பு, சுமார் ஒரு மில்லியன் பவுண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது. இருவரையும் பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment