செவ்வாய் பகவானுக்கு உரிய காயத்ரி மந்திரம்

by Lifestyle Editor
0 comment

செவ்வாய் பகவானை, செவ்வாய் காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வணங்கி வழிபடுங்கள். செவ்வாய்க்கிழமையன்று வணங்குவதும் நவக்கிரகங்களைச் சுற்றி வரும் போது, செவ்வாய் பகவானை மனதில் வேண்டிக்கொண்டு, செவ்வாய் காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.

செவ்வாய் பகவான் காயத்ரி மந்திரம் :

ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பெளமஹ் ப்ரசோதயாத்

எனும் செவ்வாய் பகவானுக்கு உரிய காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வழிபடுங்கள். செவ்வாய் பகவான் காயத்ரியை 54 முறை அல்லது 108 முறை என தினமுமே சொல்லி வழிபடலாம்.

சொந்த வீடு வேண்டும் என விரும்புபவர்கள், இடம் வாங்கியும் வீடு கட்ட முடியவில்லையே என்று வருந்துவோர், திருமணம் தள்ளிப் போகிறதே என்று கலங்குவோர் செவ்வாய் பகவானுக்கு உரிய காயத்ரியை ஜபித்து வாருங்கள்.

சொந்த வீட்டு கனவை நிறைவேற்றி அருளுவார் செவ்வாய் பகவான். திருமண பாக்கியத்தைக் கொடுத்து அருளுவார். செவ்வாய் முதலான தோஷத்தை நிவர்த்தி செய்து அருளுவார் செவ்வாய் பகவான்.

Related Posts

Leave a Comment