தன்னைத் திட்டிய ரசிகரை அனிதா கேட்ட கேள்வி… புகைப்படத்தை வெளியிட்டு வெளுத்து வாங்கிட்டாரே?

by Lifestyle Editor
0 comment

பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனியாக விளையாடி மக்களின் மனதில் நல்ல பெயரை பெற்றவர் தான் அனிதா.

பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிதும் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டனர். அவர்களை விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தினரை கூட கேலி மற்றும் ட்ரோல் என்று அதிகம் விமர்சித்தனர். இதனால் ஒரு சில போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை.

இந்நிலையில் அனிதா சம்பத் தனது வலைத்தளத்தில், நபர் ஒருவர் தனக்கு தொடர்ந்து அவதூறாக மெசேஜ் செய்து வருவதாக கூறி அந்த நபரின் புகைப்படத்தை பதிவிடுள்ளார்.

ஒரு சமயத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்த அனிதா சமபத் ஒரே சமயத்தில் அப்பாவின் இறப்பு மற்றும் சமூக வலைதளத்தில் வரும் விமர்சனங்களை எதிர்கொள்ள மிகவும் வேதனையோடு ஆரியிடம் தெரிவித்து இருந்தார்.

மேலும், பிக் பாஸுக்கு பின் அனிதா சம்பத் பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை. தன்னுடைய சமூக வலைதளத்தில் மட்டும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவ்வப்போது பதில் அளித்து வருகிறார்.

இந்நிலையில் அனிதா சம்பத்திற்கு தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் திட்டி தீர்த்து இளைஞருக்கு சரியாக பதிலடி கொடுத்துள்ளார்.

Related Posts

Leave a Comment