ஐபிஎல் ஏலத்தில் என்னை எடுக்காதது அசிங்கம் தான்! வாழ்த்துக்கள்: வெளிப்படையாக கூறிய அதிரடி வீரர்

by Lifestyle Editor
0 comment

ஐபிஎல் ஏலத்தில் தன்னை எடுக்காதது அசிங்கம் தான் என்று இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜேசன் ராய் கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் ஏலத்தில், நட்சத்திர வீரர்கள் பலரை, ஐபிஎல் அணிகள் எடுக்கவில்லை.

குறிப்பாக, ஜேசன் ராய், ஆரோன் பின்ச், காலின் முன்ரோ, அலெக்ஸ் ஹேல்ஸ், மார்ட்டின் கப்தில் போன்றோர் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜேசன் ராய் ஐபிஎல் ஏலம் குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ஐபிஎல் தொடரில் ஆட முடியாமல் போனது பெரிய அசிங்கம் தான் ஏலம் எடுக்கப்பட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

இந்த தொடரில் மேட்ச் வின்னர்கள் அதிகமாக இருப்பதால் இந்த தொடர் பார்ப்பதற்கு விறுவிறுப்பாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment