பெண்களின் மார்பக ஆலயம்! மார்பக சிலைகளை வணங்க திரளும் பக்தர்கள்

by Lifestyle Editor
0 comment

நம்மூர் கோயில்களில் இருக்கும் நிர்வாண சிலைகள் குறித்த சர்ச்சைகள் இருந்தவண்ணம் இருக்கின்றன. குறிப்பாக, மேலாடையில்லாமல் இருக்கும் பெண் சிற்பங்கள் குறித்து எதிர்ப்பு விமர்சனங்கள் நிறைய உண்டு. ஆனால், பெண்களின் மார்பகங்களை சிலையாக வடித்து வைத்து வழிபடும் கோயில் இருக்கிறது. இந்த ஆச்சர்ய கோயில் ஜப்பானில் இருக்கிறது. இந்த தனித்துவமான கோயில் 1678 ஆம் ஆண்டில் இருப்பதாக கூறப்படுகிறது. மார்பகங்களின் தெய்வமான சிச்சிகமிசாமாவை வணங்கி வருகிறார்கள்.

ஜப்பானின் ஒகயாமா மாகாணத்தில் சோஜா நகரில் அமைந்திருக்கும் இந்த கோயில் ஜப்பானில் மட்டுமல்லாது உலக அளவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

தமிழகத்தின் அம்மன் கோயிகளூக்கு சென்றால், வேப்பமரத்திலும் அரச மரத்திலும் மரத்தொட்டில்கள் தொங்கிக்கொண்டிருக்கும். குழந்தை வரம் வேண்டி அவ்வாறு கட்டியிருப்பார்கள். அதே போல, இந்த மார்பக கோயிலில் மரத்தால் ஆன, துணியினால் ஆன மார்பகங்களை தொங்கவிட்டிருக்கிறார்கள். புற்றுநோயில் இருந்து குணமடைய வேண்டியும், புற்றுநோய் வரக்கூடாது என்றும் வேண்டிக்கொண்டு இதை கட்டுகிறார்கள். தாய்ப்பால் அதிகம் சுரக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டு இந்த மார்பகங்களை வாங்கி வந்து கட்டிச்செல்கிறார்கள்.

தாய்மையை போற்றும் இந்த கோயிலில் எங்கும் பார்த்தாலும் மார்பக வடிவிலான சிலைகளும், ஓவியங்களும் இருக்கின்றன. ஒரு மார்பக சிலையின் காம்புகளில் இருந்து தண்ணீர் வருவது மாதிரி வடிவமைத்திருக்கிறார்கள். ஆட்கள் அருகே சென்று நின்றால் மட்டுமே தண்ணீர் வரும்படியாக நவீன தொழில்நுட்பத்துடன் அது அமைக்கப்பட்டிருக்கிறது.

நம்மூர் கோயில்களில் கர்ப்பக்கிரகத்தில் இருந்து வெளியேறும் நீரை எடுத்து தீர்த்தமாக தலையில் கொட்டியும், வாயில் ஊற்றுக்கொள்வதுபோல, இங்கே மார்பக சிலையில் இருந்து வரும் நீரையும் தீர்த்தமென கருதுகிறார்கள்.

பெண்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறினாலும், வேண்டுதல் நிறைவேற வேண்டியும் இந்த கோயிலில் மார்பகங்களை கட்டுவதால், மரம், துணி, அட்டையினால மார்பகங்கள் விற்கும் கடைகள் ஏராளமாக இருக்கின்றன. ஆன்லைன் மூலமாகவும் இத்தகைய மார்பகங்கள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

Related Posts

Leave a Comment