35 வயது நபரை திருமணம் செய்து கொண்ட 20 வயது பெண்! சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்ற பயங்கரம்: விசாரணையில் சொன்ன காரணம்

by Lifestyle Editor
0 comment

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காலனி மைக்கேல் பாளையம் சாலை தோட்டத்தை சேரந்தவர் நந்தகுமார்(35). மாவு மில்லில் வேலை பார்த்து வரும் இவருக்கு 3 ஏக்கர் நிலம் உள்ளது.

நந்தகுமாருக்கு 35 வயது ஆகிவிட்டதால், பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை இருப்பினும் இவர் தொடர்ந்து திருமணத்திற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்.

அப்போது தான் இவருக்கு மைதிலி என்ற பெண்ணின் பழக்கம் கிடைத்துள்ளது. இதையடுத்து இவர்கள் இருவருக்கும் ஏழு மாத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், திடீரென வயிற்று வலி காரணமாக நந்தகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவர் மருத்துவர், நந்தகுமாரிடம் என்ன ஆனது என்று கேட்டுள்ளார்.

அதற்கு அவர், மருத்துவரிடம் தான் சாப்பிட்ட சாப்பாடு கசப்பாக இருந்ததாகவும், அதில் ஏதோ பூச்சிமருந்து வாசனை இருந்ததாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து, மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், உயிரிழந்துவிட்டார்.

இது குறித்து தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இறக்கும் முன்பு நந்தகுமார் தான் சாப்பிட்ட சாப்பாட்டில் பூச்சி மருந்து வாசனை இருந்ததாக கூறியதால், பொலிசாருக்கு மைதிலி மீது சந்தேகம் வலுத்துள்ளது.

இதையடுத்து பொலிசார் மைதிலியிடம் கிடுக்குப் பிடி விசாரணை மேற்கொண்ட போது, மைலிக்கு 15 வயதில் திருமணம் ஆகி உள்ளது.

ஆனால், கணவரை பிரிந்துவிட்டார். இதன்பிறகுதான் நந்தகுமாரை இரண்டாவதாக மைதிலி கல்யாணம் செய்துள்ளார்.

மைதிலிக்கு 20 வயசுதான் ஆகிறதாம். நந்தகுமாருக்கு 35 வயதாகிறது. இது மைதிலிக்கு ஒரு பிரச்சனையாகவே இருந்துள்ளது. தாம்பத்தியத்திற்கு இடையூறாகவும் இந்த வயது பிரச்சனை இருந்திருக்கிறது..

ஏற்கனவே 35 வயசு வரை கல்யாணம் ஆகாமல் தவித்த நந்தகுமார், மனைவி உறவுக்கு ஒத்துழைக்க மறுத்ததால், மேலும் நொந்து போய்விட்டார்.

இதனால், ஒருபாலியல் மருத்துவரை நந்தகுமார் சந்தித்துள்ளார். அந்த மருத்துவர் ஏதோ மாத்திரை தந்துள்ளார்.

அந்த மாத்திரையை மைதிலி சாப்பிட்ட பிறகு கர்ப்பமானாராம். ஆனால், இதற்கு பிறகுதான் பிரச்சனையே ஆரம்பமாகி உள்ளது.

மாத்திரை கையில் கிடைத்ததும், நந்தகுமார் மைதிலியை எந்நேரமும் பாலியல் தொல்லை செய்து வந்துள்ளார். இரவு, பகல் என டார்ச்சர் தரவும் கர்ப்பிணி மைதிலி எரிச்சலாகியுள்ளார்.

இதன் பின்னரே சாப்பிட்டில் விஷம் வைத்து கொலை செய்துவிடலாம் என்று முடிவெடுத்துள்ளார்.

சம்பவத்தன்று, வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை சாப்பாட்டில் கலந்து நந்தகுமாருக்கு தந்துள்ளார்..

அதுமட்டுமல்ல, ஒருவேளை அப்படி விஷ சாப்பாடு சாப்பிட்டும் நந்தகுமார் உயிர் போகவில்லையானால், என்ன செய்வதென்று யோசித்து, மதியம் சாப்பாட்டுக்கு கட்டி தந்த உணவிலும், விஷத்தை கலந்து தந்துள்ளார்.

அதனால், காலையில் சாப்பிட்ட விஷம், டிபன் பாக்ஸில் மதியம் சாப்பிட்ட விஷம் என மொத்தமாக நந்தகுமார் உடம்பில் கலந்துள்ளது.. அதனால்தான் சிகிச்சை எவ்வளவோ தந்தும் காப்பாற்ற முடியவில்லை என்பது தெரியவந்துள்ளது.

Related Posts

Leave a Comment