பொதுவாக தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுகையில், மார்பக காம்புகளில் ஏற்படும் வலியை அனுபவிப்பார்கள்.
மார்பக காம்புகளில் ஏற்படும் வறட்சியால் புண் ஏற்பட்டு, குழந்தைகள் பால் குடிக்கையில் வலி அதிகமாகும். இதனை ஒரு சில இயற்கை வைத்தியங்கள் வாயிலாக அதனை ஓரளவு குணப்படுத்த இயலும். தற்போது அவை எப்படி என பார்ப்போம்.
- கற்றாழை செடியின் தோல் பகுதியை நீக்கிவிட்டு, உள்ளே இருக்கும் சதையை மார்பாக காம்புகளில் தடவலாம். இதனால் கற்றாழை சதையில் இருக்கும் ஈரப்பத தன்மையானது, மார்பகம் மற்றும் மார்பக காம்புகளில் உள்ள வறட்சியை சரி செய்யும். இதனைப்போன்று புண்களையும் குணப்படுத்தும்.
- சுத்தமான வெண்ணெய்யை எடுத்து மார்பக காம்புகளில் தடவினால், மார்பக காம்புகளில் உள்ள வெடிப்புகளை குணப்படுத்த உதவி செய்கிறது.
- ஐஸ்கட்டி வைத்து ஒத்தனம் கொடுக்கலாம். பருத்தியினால் ஆன உடையில் சிறிதளவு ஐஸ்கட்டியை வைத்து 10 நிமிடம் வரை மார்பக காம்பு பகுதியில் ஒத்தனம் கொடுத்தால் மார்பக காம்பு வலிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
- மென்மையான மற்றும் போதிய அளவுள்ள உள்ளாடைகளை அணிவது சாலச்சிறந்தது. மிதமான இரசாயனம் கலக்கப்பட்ட துணி பவுடர்களை பயன்படுத்தலாம். அதிகளவு இரசாயனம் சேர்க்கப்பட்ட துணி பவுடர் அல்லது சோப்களை உபயோகம் செய்தால் மார்பக காம்புகளில் புண்கள் இருந்தால், வியர்வை மூலமாக அவை கரைந்து காம்பு பகுதியில் எரிச்சல் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.
- மார்பக காம்பு மற்றும் மார்பகத்தில் ஏற்படும் வறட்சி மற்றும் புண் போன்ற பிரச்சனையை சரி செய்ய தாய்ப்பாலை மார்பக பகுதியில் தடவலாம்.
- மார்பகத்தில் புண்கள் ஏற்பட்டுள்ள பகுதிகளில் தடவினால் தோலின் வறட்சி பிரச்சனை சரியாகும். மார்பகத்தில் உபயோகம் செய்யப்படும் எண்ணெயில் சுத்தமான எண்ணெய்யா? என சோதித்துக்கொள்ள வேண்டும். முடிந்தளவு செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்யை உபயோகம் செய்ய வேண்டும்.